
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் மின்சார ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்தினர்.
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் மின்சார ரயிலை மறித்து 100க்கும் மேற்பட்ட பயணிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தினமும் 30 நிமிடம் தாமதமாக ரயில் வருவதாகக் கூறி செங்கல்பட்டு-சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
முன்னர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் ரயில்கள் குறைந்த நேரமே நின்று செல்வதால், அதிகம் பயணிகள் ஏறி இறங்குவதில் சிரமத்தை அனுபவித்தனர். ஒரு முறை பெண் பயணி ஒருவர், அவசரத்தில் இறங்கும் போது ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். அப்போது பயணிகள் இதே போல் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து, கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் கூடுதலாக 2 நிமிடங்கள் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப் பட்டது.



