
சென்னை: சென்னை ஆவடியில் உள்ள ஓ.சி.எப் தொழிற்சாலையை மூடும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு உறுதி தெரிவித்துள்ளது.
ஆவடியில் உள்ள ராணுவ சீருடை தயாரிக்கும் ஆலையான ஓ.சி.எப் தொழிற்சாலை எந்த பாதிப்பும் இல்லாமல் செயல்படும் என்று பாதுகாப்புத்துறை வாக்குறுதி அளித்ததையடுத்து தொழிற்சாலையை மூடும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு அளித்துள்ள இந்த வாக்குறுதியை அடுத்து, ஓ.சி.எப். தொழிலாளர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.



