
ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு சமூக செயலியான ஹலோ ஆப், ஒரு முன்முயற்சியை எடுத்துக் கொண்டுள்ளது.
சிக்ஸ்த் சென்ஸ் அறக்கட்டளை மற்றும் ஹலோ ஆப் இணைந்து தமிழகம் முழுவதிலும் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சாத்தியக் கூறுகள் உள்ள இடத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை, மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஹலோ – Helo செயலியில் சிக்ஸ்த் சென்ஸ் அறக்கட்டளை சார்பில் பல தன்னார்வலர்கள் இணைக்கப்பட்டு, தமிழகம் முழுவதிலும் உள்ள ஆபத்தான ஆழ்துளை கிணறுகள் குறித்த விவரம் சேகரிக்கப் படுகின்றது.
அந்த வகையில் நவ.11 திங்கள் கிழமை, சேலம் மாவட்டம், கெங்கவள்ளி பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணறு சிக்ஸ்த் சென்ஸ் அறக்கட்டளையின் முயற்சியால், அரசு அதிகாரிகள் மூலம் மூடப்பட்டுள்ளது.
முதலில் இந்த அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வலர் மூலம் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டது. பிறகு ஆழ்துளைக் கிணறு அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர், அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து தலைவர் ஆகியோரிடம், ஆழ்துளைக் கிணறை மூடுவதற்கு அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இது எங்கள் கடமை; நாங்களே செய்து முடிக்கிறோம்” என்று கூறி, பாதுகாப்பான முறையில், சேலம் கெங்கவள்ளி பகுதியில் ஆழதுளைக் கிணறு மூடப்பட்டது.
அதிகாரிகள், சிக்ஸ்த் சென்ஸ் அறக்கட்டளை தன்னார்வலர்கள் மற்றும் Helo App முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது.