அடுத்து… குடும்ப வன்முறை சட்டத்தைத்தான் கையில் எடுப்பார் கனகதுர்கா..!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
kanakadurga2 - 2026

சபரிமலைக்கு சென்று தரிசித்ததால் மாபெரும் வீராங் கனையாக மீடியா வெளிச்சத்தில் மின்னிய பெண்மணி கனகதுர்கா.

புகழோடு சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பிய கனகதுர்காவை மாமியார் வீட்டுக்குள் விடவில்லை..

சபரிமலையை அவமதித்ததாக சொல்லி மாமியார் உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்தார் என்று சொல்லி கனகதுர்கா மருத்துவமனையில் போய் படுத்தார். மருமகள் தன்னை தாக்கியதாக மாமியாரும் மருத்துவனைக்கு ஒடினார்.

இப்போது, கோழிகோடு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்ட கனக துர்காவை வீட்டில் சேர்க்க கணவரும் மறுத்துவிட்டுள்ளார். பெரிந்தலமன்னாவில் குடியி ருந்த வீட்டையே காலி செய்துகொண்டுபோய் விட்டார் கணவர்.

ஆரிக்கோடில் உள்ள கனகதுர்காவின் சகோதரர் பரத் பூஷன், சபரிமலை பக்தர்களிடம் பகிரங்கமாய் மன்னிப்பு கேட்காதவரை வீட்டுப்பக்கமே வராதே என்று கடந்த வாரமே எச்சரித்து கைகழுவிவிட்டார்.

அதனால் இப்போது ஒன் ஸ்டேப் என்ற அரசு காப்பகத்தில் கனகதுர்க்கா அடைக்கலம் புகுந்துள்ளார். அங்கு ஐந்து நாட்கள்வரைதான் தங்க முடியுமாம்.

அடுத்து என்ன? குடும்ப வன்முறை சட்டத்தை கையில் எடுத்து கணவனின் வீட்டில் நுழையும் படலமாக இருக்கலாம்..!

எல்லாம் கம்யூனிஸம் கற்றுக் கொடுத்திருக்கிறதே!

  • ஏழுமலை வெங்கடேசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.