குடிமகன்களுக்கு ‘பகீர்’… எகிறுது ‘பீர்’!

இந்தியா லைஃப் ஸ்டைல் வணிகம்
05 June13 Kumarasamy - 2026

உற்பத்திக்கான கலால் வரியை இரு மடங்காக உயர்த்துவதாக கர்நாடக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநில அரசுக்கு ரூ. 20,950 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்!.

உற்பத்திக்கான கலால் வரியை இரு மடங்காக உயர்த்தி கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம், பீர் விலை அதிகம் உயரும் என்று கூறப்படுகிறது.

கர்நாடக பட்ஜெட்டை அம்மாநில முதல்வரும், நிதி அமைச்சருமான குமாரசாமி நேற்று தாக்கல் செய்தார். அப்போது, உற்பத்திக்கான கலால் வரி தற்போது 150 சதவீதமாக உள்ளது. இது 175 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இதன்படி லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.10-ஆக கலால் வரி அதிகரிக்கும். கூடுதல் வரியாக ஒரு பாட்டிலுக்கு தற்போது விதிக்கப்படும் ரூ.12.50ல் இருந்து ரூ.25-ஆக இது அதிகரிக்கும்.

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து இது அமலுக்கு வருகிறது. இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ. 20,950 கோடி வருவாய் கிடைக்கும்.

2018-19-ஆம் ஆண்டுக்கான வருவாய் ரூ.19,750-ஆக இருந்தது. இந்த உயர்வின் மூலம், கடந்த ஆண்டை விட 1200 கோடி ரூபாய் வருவாய் உயர்வு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.