5ஆம் வகுப்பில் பொதுத் தேர்வா? என்ன சொல்கிறார் அமைச்சர்!

கல்வி கோவை தமிழகம் லைஃப் ஸ்டைல்
08 June09 Minister sengottioan - 2026

ஈரோடு: 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு குறித்து திட்டம் உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளித்தார் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

ஈரோட்டில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், பள்ளியில் பயிலும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டு வர தமிழக அரசிடம் திட்டம் உள்ளதா என்பது குறித்து பதில் அளித்தார்!

மேலும், மத்திய அரசு, 5 மற்றும் 8 ஆம் வகுப்பிலிருக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வை மாநில அரசு விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. அது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. 

இருப்பினும், அப்படி ஒரு நடைமுறையைக் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து தமிழக அமைச்சரவைதான் முடிவெடுக்க வேண்டும். இது நிச்சயமாக என் தனிப்பட்ட முடிவாக இருக்காது. இது குறித்து நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.