நீறில்லா நெற்றி பாழ்.. சொன்ன ஔவையை பாழும் நெற்றியாக்கிய பாழ்பட்ட திராவிடம்!

Published:

vairamuthu meeting - 2026

‘நீறில்லா நெற்றி பாழ்’ என்ற ஒவையாரின் நெற்றியில் ‘நீறில்லா’ து செய்து பிழைப்பை நடத்துகிறார்கள் திராவிட இயக்கத்தினர். அவர்களின் வழித்தோன்றல் வைரமுத்துவுக்கு இதற்காக கண்டனங்களைத் தெரிவிக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

ஔவையார் எழுதிய நல்வழி எனும் நீதி நூலில் இதனைக் கூறுகிறார். திராவிட இயக்கங்கள், குறிப்பாக, கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர், ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கக் கூடிய நீதி நூல்களை பள்ளிக் கல்வியில் இருந்து வெளியே எடுத்தார்கள். பள்ளிக் கல்வியில் இருந்து எடுத்ததால், இளைய தலைமுறையினர் நம் தமிழின் மேன்மை மிகுந்த பாரம்பரிய நீதி நூல்களைக் கற்க வாய்ப்பு இல்லாமல் போனது.

நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் – மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.
24

திருநீறு இல்லாத நெற்றி பாழ். நெய் இல்லாத உணவு பாழ். பாயும் ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ். கருத்து மாறுபாடு இல்லாத உடன்பிறப்பாளர் இல்லாத உடம்பு பாழ். (துணை வேண்டுமே) மனைவி இல்லாத மனை பாழ்… என்று கூறுகிறார் ஔவையார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இப்படி, திருநீறு ஆகிய விபூதியை அணிந்து கொள்ளாத நெற்றி இருந்தும் அது பாழ்பட்டது போன்றதே என்று கூறிய ஔவையாருக்கு திருநீறு அற்ற நிலையில் படம் வரைந்து வைத்ததுதான் திராவிடத்தின் சாதனை என்கிறார்கள் தமிழறிஞர்கள்!

Related articles

Recent articles

spot_img