ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து திங்கள் அன்று கடையடைப்பு, ஊர்வலம்!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
ramalingam - 2026

இஸ்லாமிய மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து மயிலாடுதுறையில் திங்கள் கிழமை கடையடைப்பும் அமைதிப் பேரணியும் நடைபெறவுள்ளது.

மயிலாடுதுறை பகுதியில் பொதுமக்களிடம் அளிக்கப் பட்ட துண்டுச் சீட்டில் குறிப்பிடப் பட்டுள்ள விவரம்…

மதமாற்றத்தை தடுத்து நிறுத்திய இளம் இந்து மாவீரன் திருபுவனம் ராமலிங்கம் அவர்களின் படுகொலையைக் கண்டித்தும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு நடவடிக்கை கோரியும் 11 2 2019 திங்கட்கிழமை மயிலாடுதுறையில் கடையடைப்பு போராட்டம்!

அன்று காலை 10 மணிக்கு அமைதி ஊர்வலம்
இடம் மயிலாடுதுறை கூறைநாடு வண்டிப்பேட்டை முதல் விஜயா தியேட்டர் வரை!

மத வன்முறையை எதிர்க்கும் அனைத்து பொதுமக்களும் பங்கேற்க வேண்டுகிறோம்
இவண்
அனைத்து இந்து இயக்கங்கள் கூட்டமைப்பு, மயிலாடுதுறை
– என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

mayiladuthurai protest - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.