நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், தமிழக கேரள காவல் அதிகாரிகளின் தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையமான குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காவல் துறையினர் இணைந்து அனைத்து அறைகளையும் பார்வையிட்டனர்.

முன்னதாக, நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் உள்ள கேரள பொதுப்பணித்துறை கட்டடத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த தமிழக- கேரள மாநில காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் மற்றும் இரு மாநில எல்லையோர பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து இரு மாநில எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது. பணம் கடத்தல் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மருத்துவ கழிவுகள் தடைசெய்வது. இரு மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள குற்றவாளிகள் கைது செய்து பின்னர் தண்டனைபெறுவதற்கு முன்னர் தலைமறைவாக கேரள மாநிலத்தில் இருந்து குற்றவாளிகள் தமிழகத்திலும், தமிழக குற்றவாளிகள் கேரளாவிலும் தங்கி இருப்பது குறித்தும் அவர்களை கைது செய்வது,வாரண்ட் குற்றங்கள் குறித்தும் உள்ளிட்ட பல்வேறு கட்ட பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்அருண்சக்திகுமார் மற்றும் இருமாநில எல்லையோர பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையமான குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காவல் துறையினர் இணைந்து அனைத்து அறைகளையும் பார்வையிட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் கூறியதாவது: பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்ப்படு காரணமாக பார்வையிட்டதாகவும் அடுத்து செய்யக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் அனைத்தையும் பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...