அது என்னய்யா… அது.. ஜப்பான் துணை முதல்வர் ஸ்டாலின்னு.. ஒரே ரவுசு கட்டுறாய்ங்க..!?

அடடே... அப்படியா? சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

stalin jappan2 horz - 2026

டிவிட்டரும் கலாய்த்தலும் ஒட்டிப் பிறந்தது போலும்! இப்போதைய மரணகலாய்க்கு ஆட்பட்டிருப்பவர் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்!

வேகமாகப் பேசுவதாலோ, என்ன பேசுகிறோம் அல்லது பேசப் போகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளும் முன் பேசுவதாலோ அல்லது வாய்த் தடுமாற்றத்தின் காரணமோ அடிக்கடி சர்ச்சை கலாய்த்தலில் சிக்கிக்கொள்வார் ஸ்டாலின்!

தமிழ் டிவிட்டர் உலகம் இப்போது வலதுசாரி ச்டாலின்சாரி என்று பிரிந்து கிடப்பதால், ஒரு சிறு குழுவை வைத்துக் கொண்டு திமுக.,வின் ஐ.டி., பிரிவு முழு நேரப் பணியில் ஈடுபட்டுக் கிடக்க, அதற்கு எதிர்த்தரப்போ எல்லோருமே வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் ஸ்டாலின் எதிர் கலாய்த்தலை வைத்து செய்துவிடுகிறார்கள்.

நேற்றைய ஞாயிறு விடுமுறை நாளில் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்கப்பட்ட ஹேஷ்டாக்
– என்பதுதான். ஜப்பான் துணை முதல்வர் ஸ்டாலின் என்று ஏன் பதிவு செய்தார்கள், எதற்காக இப்படி என்று ஆராந்து பார்த்தபோது, ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது நான் ஜப்பானில்.. துணை முதல்வராக இருந்த போது… என்று கூறுகிறார்.

அந்த ஒளிப் பதிவு…

அதாவது, ஸ்டாலின் தமிழகத்தில் துணை முதல்வராக இருந்த போது, ஜப்பானில் இருந்து … என்று சொல்வதற்கு பதிலாக, நான் ஜப்பானில் துணை முதல்வராக இருந்த போது.. என்று இடைவிடாமல் பேசி இப்போது இடைவிடாமல் நகைச்சுவை உணர்வை தமிழ் ரசிகப் பெருமக்களுக்கு மரண கலாய் ஆகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.