பிப்.14ம் தேதி காஷ்மீரின் புல்மாவோ பகுதியில் நிகழ்ந்த இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள்  வீரமரணம் அடைந்தனர்.

நாட்டையே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்திய இந்தச் சம்பவத்துக்கு உலகெங்கிலும் இருந்து கண்டனங்கள் வலுத்தன. முக்கிய நாடுகள் தங்கள் கண்டனங்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்தன.

இந்நிலையில், வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் நினைவாக அஞ்சலிக் கூட்டம் அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தில் நடைபெற்றது.

கெண்டகி மாகாணத்தில் உள்ள லூஸ்வெல்லே நகரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இந்த அஞ்சலிக் கூட்டத்தில் அந்நகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்த் கொண்டு, தங்களது மௌன அஞ்சலியை செலுத்தினர்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வெளிநாட்டு பரிவார் அமைப்பான ஹிந்து ஸ்வயம்சேவக் சங் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நாட்டுக்காக தம்முயிர் நீத்த ஜவான்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

News in Brief: HSS, Hindu Swayamsevak Sangh, the RSS international wing arranged today a very nice tribute to the soldiers in Louisville, a city in Kentucky state, USA. It was truly inspirational. Close to 50 people attended to pay their respects to  #CRPFJawans #Pulwama.

  • News: Anoop Raghunathan
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...