ரூ.2000 வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சற்றுமுன் மதுரை

madurai high court - 2026

ஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்து விட்டது.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதே கோரிக்கைகளுடன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முறையான பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்காக, நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையாவது இந்த திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என மனுதாரர் தினேஷ் பாபு தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.