ரயிலில் சென்ற போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: திமுக நிர்வாகி சந்திரன் கைது!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம்

chandran dmk sulur - 2026

கோவையில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் திமுக நிர்வாகி சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரனை கைது செய்து சேலம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் இருகூர் பேரூராட்சிப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பேரூராட்சித் தலைவராக இருந்தவர் சந்திரன்.

சந்திரன் நேற்று இரவு 8 மணி அளவில் சூலூர் திமுக அலுவலகத்திற்கு வந்தபோது, ரயில்வே போலீசார் மற்றும் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரனை கைது செய்தனர்.

திமுக நடத்திய நேர்காணலுக்குச் சென்றுவிட்டு சந்திரன் ரயிலில் கோவை திரும்பிய போது, அதே பெட்டியில் பயணித்த பெண்களின் மீது அவரின் கால் பட்டதாகவும், இதைத் தொடர்ந்து அங்கே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக சந்திரன், சன் ராஜேந்திரன் மற்றும் மூன்று பேர் ரயில்வே போலீஸாரிடம் எழுதிக் கொடுத்து விட்டு சமாதானம் பேசிவிட்டு கோவை வந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் முதல் தகவல் அறிக்கை பதியப் பட்டுள்ளதாகக் கூறி, சேலம் ரயில்வே போலீசார் சூலூர் வந்து திமுக செயற்குழு உறுப்பினர் ஆர். சந்திரனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.