கிறிஸ்துவ மதசார்புக் கட்சியான திமுக.,! கூட்டணியின் பெயரைச் சொன்னால் வெட்கக் கேடு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்

stalin stage - 2026

கிறிஸ்துவர்களின் கட்சியாகவே மாறிவிட்டது திமுக.! இந்துக்களை மதம் மாற்றுவதையும், மதமாற்றத்துக்கெனவே வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று அதை பல்வேறு முறைகேடான வழிகளில் பயன்படுத்திக் கொண்டும் வந்த கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள், சர்ச்சுகளின் ஆசி பெற்ற ஆதரவு பெற்ற அரசியல் கட்சியாக, நாத்திகக் கட்சி என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் திமுக., மாறிவிட்டிருக்கிறது.

ஒருவேளை கிறிஸ்துவம் நாத்திக மதம் என்று திமுக.,வும், திமுக.,வின் நாத்திகம்தான் தங்களின் கிறிஸ்துவ மதம் என்று பிஷப்புகளும் நினைத்துவிட்டார்களோ என்னவோ?

மாநிலங்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்களில் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்

அப்போது மதுரை புதூரில் கத்தோலிக்க உயர் மறை மாவட்ட பிஷப் தமிழக பிஷப்புகள் பேரவைத் தலைவர் அந்தோணி பாப்புசாமி ஆகியோரை சந்தித்து ஸ்டாலின் பேசினார்

ஸ்டாலினிடம் பிஷப்புகள் சார்பில் ஆதரவுக் கடிதம் அளிக்கப்பட்டது! அதில் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு களப் பணியாற்றுவோம் என்று கூறப்பட்டுள்ளது!

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் கோட்டாறு கிறிஸ்துவ பிஷப் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்!

இதை அடுத்து, தன்மானமுள்ள இந்துக்கள், தங்களைக் காத்துக் கொள்ள நினைக்கும் இந்துக்கள், தங்கள் தெய்வங்களை இழிவுபடுத்தியவர்களைப் பழி வாங்க வேண்டும் என்று நினைக்கும் இந்துக்கள் நிச்சயமாக திமுக., கூட்டணியை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பார்கள் என்று உறுதியாகக் கூறுகின்றனர் மதுரை நகர் வாசிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.