தனது ஃபோர்ஜரிகளுக்கு ஜெயா டிவி.,யை பயன்படுத்திக் கொள்ளும் டிடிவி தினகரன்!

Reporters Diary அடடே... அப்படியா? கிரைம் நியூஸ் புகார் பெட்டி

ttvdinakaran - 2026

தனது போர்ஜரிகளுக்கு, தங்கள் குடும்ப ஜெயா டிவியை உபயோகப்படுத்திக் கொள்கிறார் டிடிவி தினகரன் என்கிறார்கள்.

அமமுக துணைப் பொதுச் செயலர் டி டி வி தினகரன் தங்கியிருந்த ஹோட்டலில் பறக்கும் படையினர் சோதனை நடத்த வந்துள்ளனர். ஆனால் அவர்களை சோதனை நடத்த விடாமல் ஜெயா டிவி ஊழியர்கள் படம் பிடித்து பறக்கும் படையினரை ஆய்வு நடத்த விடாமல் விரட்டி அடித்துள்ளனர்

காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக் கரையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் தங்கியிருந்தார். அங்கே பண பரிவர்த்தனையை நடப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து நள்ளிரவு ஒரு மணி அளவில் தாசில்தார் ராஜம்மாள் தலைமையில் போலீஸார் உள்ளிட்ட குழுவினர் அந்த ஹோட்டலுக்கு சோதனைக்காக சென்றனர்! அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கி உள்ளே சென்றபோது தினகரனுக்கு சொந்தமான ஜெயா டிவி ஊழியர்கள் பறக்கும் படை தாசில்தார் மற்றும் போலீசாரை அச்சுறுத்தும் வகையில் கேமராக்கள் கொண்டு படம் பிடித்து அவர்களை ஆய்வு நடத்த விடாமல் இடையூறு செய்து உள்ளனர்

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

இதனால் அங்கு ஆய்வு மேற்கொள்ள இயலாமல் தாசில்தார் மற்றும் பறக்கும் படையினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்!

பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்துள்ள நிலையில், தினகரன் தரப்பினர் அதை வைத்தே வாக்காளர்களை மடக்க திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகின்றனராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.