ஹிந்தி தெரியல.. மத்திய அரசு பணிகள்ல தமிழர்களுக்கு இடமும் கிடைக்கல..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

rajendra balaji admk minister - 2026

ஹிந்தி தெரியாததால் மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு இடம் கிடைவில்லை என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

ஹிந்தி எழுதப் படிக்கத் தெரியாததால்தான் மத்திய அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்காமல் இருக்கிறது என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது… ரயில்வே துறையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்காததற்குக் காரணமே திமுக தான்! ஹிந்தி படிக்கத் தெரியாததன் காரணமாகத் தான் மத்திய அரசுத் துறைகளில் தமிழர்களுக்கு சரியான இடம் கிடைக்கவில்லை! திமுக தலைவர் குடும்பத்தினர் ஹிந்தி நன்கு அறிந்தார்கள்! அவர்களைத் தவிர யாரும் ஹிந்தி படிக்கவிடாமல் செய்தார்கள்! என்று கூறினார் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை என்ற நிலையை உருவாக்குவதாக திமுக., சபதம் செய்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், தமிழகத்தின் பின்னடைவுக்குக் காரணம் என்ன என்பதை வெளிப்படையாகக் கூறியதால், ராஜேந்திர பாலாஜியின் நிதர்சனமான கருத்தை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் திமுக.,வினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.