மதுபான, குளிர்பான ஆலைகள் நீர் எடுக்க தடை வேண்டும்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

water bump - 2026

மதுபான ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க மதுபான ஆலைகள் மற்றும் தனியார் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவி கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கையில்…

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது மக்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்

இந்தச் சூழ்நிலையில் மதுபான தயாரிப்பு ஆலைகள் மற்றும் தனியார் குளிர்பான நிறுவனங்கள் நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சி பணம் சம்பாதிக்கின்றனர்! மக்களின் துயர் துடைக்க இந்த நிறுவனங்கள் தண்ணீரை உறிஞ்சுவதை தடுக்க வேண்டும்

மக்கள் பலன் பெற போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.