December 5, 2025, 11:23 AM
26.3 C
Chennai

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (54): கோமுக வ்யாக்ர ந்யாய:

samskrita nyaya - 2025

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 54

தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

கோமுக வ்யாக்ர ந்யாய: – பசுந்தோல் போர்த்திய புலி.

கோமுக: – பசுவின் முகம்,  வ்யாக்ரம் – புலி.

‘மேலுக்கு பசுவைப் போலத் தோற்றமளித்தாலும் (பசுவைப் போல ‘அம்பா’ என்று கத்தினாலும்) உள்ளுக்குள் புலியைப் போன்ற கொடூர குணம் கொண்டிருப்பது’ என்ற பொருளில் இந்த நியாயத்தை எடுத்துக்காட்டுவார்கள்.

சுலோகம்:

சாந்தமுகோ கோமுகவத் அந்தர்யஸ்யாந்தரே வ்யாக்ர: |
தாத்ருஸம் ந விஸ்வயேத் மித்ரம் ஸத்ரும் ச மானவ: ||

பொருள்: வெளியில் பசுவைப் போன்று அமைதியான முகத்தோடு சாது குணத்தைக் காட்டி, உள்ளே  புலியின் கொடூரமான குணத்தை மறைத்திருப்பவரோடு நட்போ, பகையோ கூடாது. இரண்டுமே ஆபத்து.

நம்மிடம் யாராவது மிகப் பணிவோடு இருந்து, அதிகமாக நம்மைப் புகழ்ந்து,  செயற்கையாக நடந்து கொண்டு, இனிமையாகப் பேசி, நட்பு பாராட்டினால், ஏதோ தீங்கு நடக்கப் போகிறது என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது இந்த நியாயம். 

மேலுக்கு சாதுவைப் போலவும், பரோபகாரியைப் போலவும் ரொம்ப நல்லவனாகவும் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் அதற்கு மாறாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் வஞ்சிக்கும் எண்ணத்தோடு நண்பனாக நடிப்பார்கள். இது ‘கோமுக வ்யாக்ர நியாயம்’ காட்டும் பார்வை. அவர்களுடைய நைச்சியமான (நீச்சம்) பேச்சில் மயங்கி, அவர்களை நம்பி, அவர்களிடம் நெருங்கி, புலிக்கு பலி ஆவதோ, அல்லது புரிந்து கொண்டு தப்பி ஓடுவதோ நம் கையில் தான் இருக்கிறது.  ஏமாற்றப்பட்டபின் வருந்தி என்ன பயன்? ஏன் இப்படி நடந்தது என்று அழுது என்ன பிரயோஜனம்?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல. வெள்ளையாக இருப்பதெல்லாம் பாலல்ல என்ற புரிதல் தேவை. விழிப்போடு இருக்க வேண்டும். இது இந்த நியாயம் புகட்டும் பாடம்.

புராணங்களில் புலிகள்:

மாய மான் வேடத்தில் வந்த மாரீசன் ராமனின் அம்புக்கு இரையானான். தெய்வ லீலையாக சீதாதேவி பேசிய கடுஞ்சொற்களைக் கேட்ட லட்சுமணன் அண்ணன் ஸ்ரீராமனைத் தேடிக் கொண்டு சென்றார். அந்த நேரத்தில் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தனியாக இருந்த சீதையை சிறைப்பிடிக்கும் நோக்கத்தில் ராவண அசுரன் பசுந்தோல் போர்த்திய புலியாக அவளைக் கவர்ந்து சென்றதை வால்மீகி மகரிஷி விளக்குகிறார்.

சுலோகம்:

ஸ்லக்ஷண காஷாய சம்வீத: ஸிகாசத்ர உபானஹீ: |
வாமே சாம்சே வஸஜ்யாத சுபேயஷ்டி கமண்டலூ  
பரிவ்ராஜக ரூபேண வைதேஹீ மன்வபத்யத ||

(வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 46 வது சர்க்கம்)

பொருள்: ராவணன் மென்மையான காவி உடை, தலையில் சிகை, கையில் குடை,  கால்களில் பாதணிகள், இடது தோளில் தொங்கிய தண்டம், கமண்டலம் ஆகியவற்றோடு சீதா தேவியை நெருங்கினான்.

“காஷாய தண்ட மாத்ரேண யதி: பூஜ்ய ந சம்சய:” என்பது உலகில் புழங்கும் வழக்கமான கூற்று. சாதுக்களின் அடையாளமான காஷாய உடையைப் பார்த்து சீதா தேவி ஏமாந்தாள். சுபமான வேடம் தரித்து வஞ்சிக்க வேண்டும் என்று வந்ததை வால்மீகி மகரிஷி, “த்ருணை: கூப இவாவ்ருத:” என்று குறிப்பிடுகிறார். ‘புல்லால் மூடப்பட்ட கிணறு  போல’ என்று வஞ்சகத்தை வர்ணிக்கிறார். 

உண்மையில் புலி என்றுமே பசுவின் முகத்தை அணியாது. பசுவைப் போல ‘அம்பா’ என்று கத்தாது. பலவித முகமூடிகளை அணிவதும், வேடங்கள் தரிப்பதும், மோசங்கள் செய்வதும் மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான கலை. அப்படிப்பட்ட மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உபதேசமாக அளிப்பதே இந்த ‘கோமுக வயாக்ர’ நியாயத்தின் நோக்கம்.

வரலாற்றில் பசுந்தோல் போர்த்திய புலிகள்:

நாட்டுப் பிரிவினையின் போதும், ரஜாக்கர்களின் தாக்குதல் நேரத்திலும், காஷ்மீர் பண்டிதர்களைக் கொன்றழித்த வேளையிலும், பெங்கால் மற்றும் பஞ்சாப் பிரிவினைகளின் போதும் நேர்ந்த சோகக் கதைகள் இந்த நியாயத்தை நினைவூட்டுகின்றன.

அருகிலேயே வசித்து, கொடுக்கல் வாங்கல்ளில் ஈடுபட்டு, ‘அங்கிள் ஆன்ட்டி, சித்தப்பா, சித்தி, பாய் பெஹன்’ என்று அழைத்துக் கொண்டு பசுவைப் போல் நடித்த சில புலிகள் பாய்ந்தெழுந்து நம் கோவில்களையும், குருத்வாராக்களையும் இடித்து, விக்ரகங்களைப் பூஜிக்கும் ஹிந்துக்களின் மேல் பாய்ந்த பயங்கரமான கதைகளை சரித்திரம் கூறுகிறது.  ‘காஃபீர்’ பெண்கள் யாரும் இந்தியாவுக்குச் செல்லமட்டாகள். அவர்களை நாங்கள் எடுத்துக் கொள்வோம். “காஃப்ரான் கட்னா அசி திகாலேங்கே” (காஃபீர்களா உங்களை நாங்கள் கத்தரித்துக் காட்டுவோம்), “கிசே மந்திர் விச் கண்ட்டி நஹி வஜ்ஜுகீ ஹூன்” (எந்தக் கோவிலும் இருக்காது. கோவிலில் மணி ஒலிக்காது) என்று மசூதிகளில் இருந்து கூச்சலிட்டுக் கொண்டு ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் கழுவில் ஏற்றினார்கள். பெண்களை கூட்டு வன்முறை செய்தனர். அவர்களை ஆடையின்றி ஊர்வலம் விட்டார்கள், (இன்றைய பாகிஸ்தானில் அண்மையில் நடந்த இதே போன்ற சோகக் கதையை நேரடியாகப் பார்த்த பிரபல வரலாற்று ஓவியர் கெ.சி.ஆர்யன் வரைந்த படத்தை இன்டர்நெட்டில் பார்க்கலாம். அதே போல் vashisharma.com ல் இருக்கும் நூல்களையும் சோதிக்கலாம். புலிக்கு பலியான பசுக்களைப் பற்றிய கதைகளைப் படித்து அழலாம்).

நிகழ்காலத்தில் பசுந்தோல் போர்த்திய புலிகள்:

அண்மைக் காலத்தில் இந்தியாவில் பல இடங்களில் இந்த ‘கோமுக வ்யாக்ர” கதைகள் நடப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதம் கொடுக்கும் ஆதரவால் பெற்ற கல்லூரி சீட், பைக், பணம் ஆகியவற்றின் மூலம் அப்பாவிகளான ஹிந்து பெண்களை காதல் என்ற பெயரில் வஞ்சித்து, அவர்களைத் துண்டுதுண்டாக வெட்டி வீசிய செய்திகள், பிள்ளை பெறும் இயந்திராமாகவோ, மனித வெடி குண்டாகவோ மாற்றிய சம்பவங்கள் இந்த ‘கோமுக வயாக்ர’ நியாயத்திற்கு எடுத்துக் காட்டுகள். 

தன்னை ஒரு ஹிந்துவாக அறிமுகம் செய்து கொண்டு, பெயர், வேடம் எல்லாம் மாற்றிக் கொண்டு ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் அக்கிரமங்கள் செய்து போலீசாருக்கு வசமாகச் சிக்கி தற்போது சிறையில் இருக்கும் ‘வ்யாக்ரம்’ இம்ரான் என்ற ஆட்டோ டிரைவரின்   கதை அண்மையில் இந்தியா டிவிவில் ஒளிபரப்பானது. மதுரா, பிருந்தாவன், போன்ற புனிதத் தலங்களைச் சேர்ந்த மாணவிகளும், திருமணமான பெண்களும் ஒரு ‘கோமுக வ்யாக்ர’த்திற்கு பலியானார்கள். இதுவரை இருபத்து மூன்று ஹிந்து பெண்களை அனுபவித்ததாக வெட்கமின்றி அவன் கூறிக் கொண்டது கொடுமை. ஐம்பது ஹிந்து பெண்களை வலையில் சிக்க வைக்க வேண்டும் என்பது தன் லட்சியம் என்று இம்ரான் போலீசாரிடம் கூறினானாம்.

தேச முன்னேற்றத்திற்குத் தடை:

சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமுதாய நலன் என்ற பெயரில் அக்கிரமங்களில் ஈடுபடும் பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கு நம் தேசத்தில் பஞ்சமே இல்லை. குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ் மாநிலங்களுக்கு நன்மை தரும் ‘சர்தார்   சரோவர் டாம்’ கட்டமைப்பு தாமதமானதின் பின்னால் தேச விரோத இடது சாரியும் வெளிநாட்டு ஏஜெண்டுகளும் செய்த சதி உள்ளது. சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்று முழங்கி மேதாவிகள் இந்த ப்ராஜெக்டிற்கு தடை விளைவித்தார்கள். 1961ல் அஸ்திவாரம் போட்டு, 1987 ல் தொடங்கி, ஒருவழியாக 2017 ல் முழுமையடைந்தது. அதன் பின்னால் இருந்த புலிகளின் முகமூடி விலகியது. இப்படிப்பட்ட முயற்சிகளைக் கொண்டே தோரியம், தாமிரம் போன்ற கனிமங்களைத் தோண்டுவதிலும் தேசதுரோக இயக்கத்தினர்  தடை ஏற்படுத்தினர்.

கிறிஸ்தவ சங்கங்களின் பெயரில் பத்திரிக்கையாளர்களைப் போலவும், மனித உரிமைப்  பாதுகாவலர்களைப் போலவும் இந்த பசுந்தோல் போர்த்திய புலிகள் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்துகிறார்கள். ‘ஷாஹின்பாக்’ விவசாயிகள் போரரட்டத்தின் பின்னால் இருக்கும் சதி உலகம் அறிந்ததே.

எப்போதாவது மட்டுமே வாயைத் திறக்கும் அப்போதைய பிரதமர் திரு மன்மோகன் சிங் ஒரு கடினமான விமரிசனம் செய்தார். “உரிமைச் சங்கங்களின் பெயரிலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் பெயரிலும் நடைபெறும் போராட்டங்களின் பின்னால் தேச முன்னேற்றத்தைத் தடுக்கும் சதி உள்ளது” என்றார். இது ‘அட்சர சத்தியமான’ கூற்று.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories