கோவையைத் தொடர்ந்து மதுரை: என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை

nia office - 2026

மதுரை: கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு பிரிவு முகமை – என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சமூக வலைதளங்களின் மூலம் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொச்சியில் இருந்து வந்துள்ள என்.ஐ.ஏ., அதிகாரிகள் 3 இடங்களில் சோதனை நடத்தினர்.

மதுரை, வில்லாபுரத்தைச் சேர்ந்த சதகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

முன்னதாக, இலங்கை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக, கடந்த வாரம் கோவையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சிலர் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.