இன்று… டிவிட்டரை ஆக்கிரமித்த காஷ்மீர்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

kashmir twitter - 2026

ஆக.5, இன்று இந்தியத் திருநாட்டின் வரலாற்றில் முக்கியமான நாளாக அமைந்து விட்டது. பாஜக., தனது மூன்று முக்கியக் கொள்கைகளாக இது வரை கொண்டிருந்தவற்றில் ஒன்றை இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அது, காஷ்மீரில் 370வது சட்டப் பிரிவை நீக்குவதுதான்!

காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரமே இன்று சமூக வலைத்தளமான டிவிட்டரை ஆக்கிரமித்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ மத்திய அரசு  ரத்து செய்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மசோதா கொண்டு வந்தது. காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசமாக மாற்ற உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதா தாக்கல் செய்தார் !

கடும் அமளிக்கு மத்தியில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகள் சிலரது கருத்துகளும் முன் வைக்கப் பட்டன. பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டது.

இந்நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் டாப் 20ல் அனைத்து இடங்களையும் காஷ்மீர் தொடர்பான விவகாரமே ஆக்கிரமித்தது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் லட்சக்கணக்கில் கருத்துப் பதிவுகள்  ஆக்கிரமித்திருந்தன.

காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து #Article370, #370Abolished, #StandwithKashmir, #KashmirHamaraHai, #JammuAndKashmir, Ladakh, #kashmiroperation #KashmirMeinTiranga #KashmirIntegrated #Artical370 #ModiIntegratesKashmir #370byebye #370gaya #StandwithKashmir #NarendraModi #JammuAndKashmir #BharatEkHai #KashmirHamaraHai என பல தலைப்புகளில் ஹேஷ்டாக்குகள் உருவாக்கப் பட்டு டிரெண்டிங் ஆயின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.