சென்னை: தமிழகத்தில் தற்போது வெயிற் காலம் என்பதால், வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தில் பங்குனி, சித்திரை மாதங்களில் வழக்கம்போல் வெப்பம் அனல் கக்கும். ஆனால் தற்போது, பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியது. குறிப்பாக நெல்லை மாவட்டம் குற்றாலம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நீர் இன்றி மலைப் பகுதியில் வறண்டு கிடக்கிறது. மேலும், சென்னை, வேலூர், திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காற்றில் ஈரப்பதம் குறைந்து வருவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாம். தற்போது தமிழகத்தில் பரவலாக 95 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது . நெல்லை, மதுரை, திருச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, சென்னை என அனல் அதிகமாக இருக்கும் என்றும், கடந்த காலத்தை விட இந்த முறை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் 112 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
Popular Categories



