dress - 2026

குழந்தைகள் மற்றும் பெண்களின் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக துணிக்கடைகளில் இருக்கும் டிரையல் ரூம்களிலும், விடுதிகளில் இருக்கும் கழிவறைகளிலும் மறைமுகமாக செல்போன், கேமரா வைக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன.

ஆனால், மருத்துவமனையில் செல்போன் மூலம் பெண்கள் உடைமாற்றுவதை ஒரு நபர் வீடியோ எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dress 2 - 2026

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் செவிலியர்கள் நேற்று பணிமுடிந்த பின்னர் உடைகளை மாற்றிக் கொண்டிருந்துள்ளனர்.

dress 1 - 2026

அப்போது அதனை பின்னால் இருந்து ஒரு நபர் வீடியோ எடுப்பதைக் கண்டுபிடித்த பெண்கள், அவரை கண்டித்துள்ளனர். உடனே அங்கிருந்து தப்பியோடிய அந்த நபர் மருத்துவமனை வாசலில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனை பணியாளர்கள் அந்த நபரைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர் பெயர் பிராவின் (30) என்றும் அவர் மந்தாரம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் மினிலாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
dress cell - 2026

மேலும், அவர் இது போல பலமுறை வீடியோ எடுத்ததும், அவர் செல்போனில் ஆபாச படங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் அவரை கைது செய்த காவல்துறையினர், பிராவின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending