ஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை!

உலகம் சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
nadali - 2026

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது. இதில், பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த விழாவில் பிரபல நடிகை நடாலி போர்ட்மென், ஆஸ்கரில் சிறந்த இயக்குநர் பிரிவில் பரிந்துரைக்கப்படாத பெண் இயக்குநர்களின் பெயர்களை தனது ஆடையில் தைத்து அணிந்து வந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

nadali 1 - 2026

92-வது அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் எந்தவொரு பெண் இயக்குநரும் பரிந்துரை செய்யப்படவில்லை என்பது சர்ச்சையானது. இதுதொடர்பாக, அகாதமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனமும் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே, இதுவரை சிறந்த இயக்குநர்களுக்கான பிரிவில் ஐந்து பெண் இயக்குநர்கள்தான் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில், கேத்ரின் பிகிலோ என்ற இயக்குநர் மட்டுமே ஆஸ்கரையும் வென்றுள்ளார்.

nadali 2 - 2026

இதை விமர்சிக்கும் விதமாக நடிகை நடாலி போர்ட்மென் தனது ஆடையில், ஹஸ்ட்லர்ஸ்',தி ஃபேர்வெல்’, லிட்டில் வுமன்',எ பியூட்டிஃபுல் டே இன் தி நெய்பர்ஹூட்’, குயின் & ஸ்லிம்',ஹனி பாய்’, போர்ட்ரெய்ட் ஆஃப் எ லேடி ஆன் ஃபயர்' மற்றும்அட்லான்டிக்ஸ்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பெண் இயக்குநர்களின் பெயர்களை தைத்திருந்தார்.

விருது வழங்கும் விழாவில் நடிகை நடாலி இதுபோன்ற தனது விமர்சனங்களைப் பதிவு செய்வது முதன்முறை அல்ல. 2018-ம் ஆண்டு சிறந்த ஆண் இயக்குநருக்கான விருது ஒன்றை அறிவிக்கும் மேடையில், விருதை வழங்குவதற்கு முன்பு `

`விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் அனைத்து ஆண் இயக்குநர்களும் உள்ளனர்” என்று கூறினார். இந்தக் கருத்தும் பலரது கவனத்தையும் பெற்றது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.