பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
ஸ்ரீரங்கம் கோயிலில் கன்யாஸ்த்ரிகள் ‘சிலுவை’ காட்டிய சர்ச்சை! நடந்தது என்ன?
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீரங்கம் உள்ளூர் அன்பர்கள் சிலர், நம் ஆலயங்களைப் பார்க்க ஆசையுடன் வருபவர்களை வரவேற்று, அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து, நாம் தான் நம் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துச் சொல்லி, இங்கே இப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டும். அதை விட்டு, அவர்களை வெளியே துரத்துவது மிகத் தவறு என்கின்றனர்
பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்களால் தாக்குதலுக்குள்ளான மக்களிடம் மன்னார்குடி ஜீயர் ஆறுதல்!
மன்னார்குடி செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள் அப்பகுதிக்கு வந்திருந்தார். பின்னர் அந்த மக்களிடையே எழுந்தருளி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அம்பை மின்வாரியம் கவனத்துக்கு: உயிர்ப் பலி ஏற்படும் முன் காத்தருளுங்கள் ப்ளீஸ்…!
ஆனால், காற்று அடிக்கும் போதும், நிறுத்துக் கம்பி உராயும் போதும் இந்த பிவிசி பைப் நகர்ந்தால், அப்போது யாரேனும் நிறுத்துக் கம்பியை பிடித்துக் கொண்டிருந்தாலோ, பெரும் காற்று, மழைக் காலத்திலோ, உயிர் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?
குழந்தையை கடத்த வந்ததாகக் கருதி கிராமத்தினர் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு: திருவண்ணாமலை அருகே சோகம்!
என்ன என்பதைக் காது கொடுத்துக் கூட கேட்காமல், காரில் வந்த அப்பாவிகள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதில், 65 வயதான ருக்மிணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த வெங்கடேசன், மோகன்குமார் ஆகியோர் வேலூர் மருத்துவமனையிலும், சந்திரசேகரன், கஜேந்திரன் ஆகியோர் திருவண்ணாமலை மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
நிர்மலாதேவி விவகாரம்: ஆளுநர் நியமித்த விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்க முடியாது!
செல்வகோமதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் நீதிபதிகள் கோவிந்தராஜ் , சாமிநாதன் ஆகியோர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தனர்.
விஜய் பாணியில் விஷால்; இரும்புத் திரையை பாஜக.,வினர் ஹிட் ஆக்குவார்களா?!
விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அதுகுறித்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்கக்கோரியும் நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
விஷ்ணுபிரியா மரணம் குறித்த வழக்கு! சாகும் வரை விடமாட்டேன்: சீறும் ரவி
விஷ்ணுபிரியாவின் மரணம், தற்கொலை தான் என முடிவு செய்ததால், வழக்கை சிபிஐ கைவிடுவதாக அறிவித்தது குறிப்பிடத் தக்கது.
அமைச்சரின் குலதெய்வக் கோவிலில் இடி விழுந்து கோபுரம் சேதம்! கும்பாபிஷேகம் முடிந்த மறுநாள் சோகம்!
இந்தக் கோவிலில் இரு தினங்களுக்கு முன்னர்தான் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் நேற்று இடி விழுந்த அதிர்வில் கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலைகளில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.
பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் முனைவர் அ.அறிவொளி காலமானார்
திருச்சி: பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான முனைவர் அ.அறிவொளி செவ்வாய்க்கிழமை நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80.
சிங்கத்தை மயக்கிய பேச்சாளர்!
அவர் அந்தப் பக்கம் போனதும் எழுந்திருச்ச சிங்கம், “அப்பாடா… நல்ல வேளை மயக்கம் போட்ட மாதிரி நடிச்சேன். இல்லன்னா இவன் என்னை பேசியே கொன்னுருப்பான்”னு சொல்லிட்டே காட்டுக்குள்ள ஓடிப் போச்சு.
கேதார்புரி புனரமைப்பு; பாஜக., சொல்வது உண்மையா? பார்க்கக் கிளம்பிய ஹரீஷ் ராவத் பாதியிலேயே நிறுத்தம்!
நிலைமை சீரடையும் வரை லிஞ்சவுலி, பீம்பலி உள்ளிட்ட இடங்களில் யாத்ரீகர்கள் பாதுகாப்பாக காத்திருக்க வேண்டும் என்றும் கேதார்நாத் ஆலயத்திலும் மூன்று இன்ச் அளவுக்கு பனி படர்ந்துள்ளதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து: ஆபாசப் படங்களுக்கு எதிராக ராமதாஸ் போர்க்கொடி!
தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.
