மாரடைப்பால் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் உடல் தமிழகம் கொண்டு வர ஏற்பாடு: எடப்பாடி

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

நீட் தேர்வு எழுத கேரளா சென்ற மகனுக்கு துனையாகச் சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, அங்கே மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுமாறு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற நிலையில், மாணவனின் தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தந்தை மாரடைப்பால் மரணமடைந்தது தெரியாமல் மகன் நீட் தேர்வு எழுதினார்.

இந்தச் செய்தி தமிழகத்தை சோகத்தில் தள்ளிய நிலையில் மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை செயலருக்கு, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.