delhi.jpeg - 2026

டெல்லியில் கட்டுமான இடிபாடுகளில் சிக்கி ஐவர் பலி..

சற்றுமுன்

டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமான பணியில் இடிபாடுகளில் சிக்கி ஐவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

இன்று காலை அந்த அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மீட்டக்கப்பட்ட நிலையில், அதில் படுகாயம் அடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. கட்டுமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

delhi.jpeg - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.