வயநாடில் ஏப்.5 வியாழன் அன்று மனுத்தாக்கல் செய்கிறார் ராகுல்!

இந்தியா சற்றுமுன்

rahul gandhi 24 - 2026

திருவனந்தபுரம்: உ.பி.யின் அமேதி தொகுதி மட்டுமல்லாது, கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்தது.

இந்நிலையில், தான் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது, காங்கிரஸ் கட்சி தென் இந்தியாவையும் கவனத்தில் கொண்டுள்ளது, தென் இந்தியாவைப் புறக்கணிக்கவில்லை என்ற கருத்தை மக்களிடம் தெரிவிக்கத்தான் என்று விளக்கம் கொடுத்தார் ராகுல் காந்தி.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய போது ராகுல் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், வயநாடு மக்களவை தேர்தலில் போட்டியிடும் ராகுல்காந்தி ஏப்.,4ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்யும்போது பிரியங்கா காந்தியும் கேரளா வர உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.