மோடி ஆதரவாளரான முதியவர் கோவிந்தராஜ் கொலை! அமித்ஷா கண்டனம்!

Published:

amit shah - 2026

தமிழகத்தில் மோடிக்காக வாக்கு சேகரித்த கோவிந்தராஜ் என்ற முதியவர்  கொலை செய்யப்  பட்ட விவகாரத்தில் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை எதிர்க் கட்சியினரால் தஞ்சையைச் சேர்ந்த 75 முதியவர் மற்றும் பாஜக நிர்வாகி ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பாஜக கூட்டணிக்கு வாக்கு சேகரித்த ஒருவர் கொடூரமாக கை கால்கள் வெட்டப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.

இது மக்களிடையே திமுக., மீதான வெறுப்பினை அதிகப் படுத்தியுள்ளது! ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வதாக பஜகா.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குஜராத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது மேற்கு வங்கத்திற்கு பிறகு தற்போது பாஜகவிற்கு வாக்கு சேகரித்த 75 வயது முதியவரை தமிழகத்தில் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். மோடி அரசாங்கம் கொண்டுவந்த மருந்தகம் மூலம் தான் மிக குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பயன் அடைந்ததை முன்வைத்து வாக்கு சேகரித்திருக்கிறார்! ஆனால் அவரை அடித்து கொன்றிருப்பது எவ்வளவு பெரிய கொடூரமான செயல்!? இதனை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

ஒருவேளை பாஜக வைச் சேர்ந்த யாரேனும் இதுபோல் ஒரு செயலை செய்திருந்தால் இந்த ஊடகங்கள் இப்படித்தான் அமைதியாக இருந்திருக்குமா? மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

அவரின் ஆன்மா சாந்தியடைய, கடவுளை பிராத்திக்கிறேன் அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்… என்று பேசினார்.

Related articles

Recent articles

spot_img