வேளாங்கண்ணி அருகே பாஜக பிரமுகர் படுகொலை

உரத்த சிந்தனை கிரைம் நியூஸ் திருச்சி

murder - 2026

வேளாங்கண்ணி அருகே பாஜக பிரமுகரை கழுத்தறுத்து படுகொலை செய்து, அவரது உடலை ஏரியில் வீசிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே திருப்பூண்டி கடைத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 40 வயதாகும் இவர் பாஜக அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவராக இருந்து வந்தார்

இவர் வேளாங்கண்ணி திருப்பூண்டி ராமேஸ்வரம் கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மற்றும் இந்து இயக்கங்களின் கொள்கைகளை பரப்புவதில் தீவிரம் காட்டி வந்தார்

இந்நிலையில் காமேஸ்வரம் கீரன் ஏரியில் கழுத்து அறுபட்டும் நெற்றி புருவம் ஆகிய இடங்களில் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கிளியூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

கீழையூர் மற்றும் நாகை டவுன் போலீசார் அங்கு சென்று செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் குமாரை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.