இளம்பெண்ணை ஆபாச படமெடுத்து மிரட்டி கொலை செய்த திமுக நிர்வாகி? எங்கே உதயா? ட்ரெண்ட் ஆகும் #JusticeForSasikala

Published:

sasikala

செங்கல்பட்டில் இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து, பாலியல் தொல்லைக்கு இணங்காததால் படுகொலை செய்த தி.மு.க இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் தலைமறைவு. @UdhayStalin தலைமையிலான தி.மு.க இளைஞரணியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு யார் நீதி பெற்று தருவர்? – என்று டிவிட்டர் பதிவுகளில் கேள்விக் கணைகள் பறக்கின்றன.

யார் இந்த இளம்பெண்? திமுக., இளைஞரணி தலைவர் உதயநிதி வாய்மூடியும், திமுக., இளைஞரணி செங்கல்பட்டு செயலர் தலைமறைவானதற்கும் பின்னணி என்ன?

செங்கல்பட்டு மாவட்டம் நைனார்குளத்தை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு என்பதால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், சசிகலா வசித்துவந்த பகுதியைச் சேர்ந்த திமுக., நிர்வாகி தேவேந்திரன் என்பவர், தனது அண்ணன் புருஷோத்தமனுடன் சேர்ந்து ஆபாசமாக படம் எடுத்து தன் ஆசைக்கு இணங்குமாறு சசிகலாவுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சசிகலா, வீட்டில் உள்ளவர்களிடம் நடந்ததைக் கூறிவிடுவேன் என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக தேவேந்திரன் மற்றும் அவரது அண்ணன் இருவரும் சசிகலா’வை அடித்து கொலை செய்ததுடன் தூக்கில் தொங்கவிட்டு , சசிகலா தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த சசிகலா’வின் அண்ணன் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார். தன் தங்கையின் இறப்பில் மர்மம் உள்ளதாகக் கூறி அவர் அந்தப் புகார் அளித்தார். அதில், அதே பகுதியைச் சேர்ந்த திமுகவின் தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் ஆகியோர் தன் தங்கையை கொலை செய்து விட்டு நாடகமாடியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

குற்றம் சாட்டப்பட்ட இருவரும், அந்தப் பெண் குளிக்கும்போது வீடியோ எடுத்து அவரை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாகவும் வீடியோவை இணையதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி வந்ததாகவும் பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

sasikala

அண்மையில் அந்தப் பெண்ணுக்குத் திருமண ஏற்பாடு செய்ததாகவும் அதனாலேயே அவரை அவர்கள் இருவரும் தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் எனவும் அந்தப் பெண்ணின் உறவினர்கள் கூறியுள்ளனர். இதை அடுத்து, பெண்ணின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெண்ணின் சகோதரர் சுடுகாட்டில் சசிகலா புதைக்கப்பட்ட இடத்திலேயே இருந்து வருகிறார். மீண்டும் பிரேத பரிசோதனை செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என சுடுகாட்டில் காத்து இருக்கிறார். அதனடிப்படையில் போலீசார் திமுகவை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் ஆகியோர் மீது தற்கொலை செய்ய தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் தலைமறைவாக உள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் தேவேந்திரனை தேடி வருகின்றனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
sasikala

இந்நிலையில் அனைத்து விஷயங்களுக்கும் குரல் கொடுக்கும் உதயநிதி தான் பொறுப்பு வகிக்கும் இளைஞரணியின் கீழ் இருக்கும் ஒருவர் இப்படி கொலை செய்து தலைமறைவாகி இருப்பதற்கு என்ன சொல்வார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திமுகவை விமர்சித்து #JusticeForSasikala என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி வரும் நிலையில் திமுக பிரமுகரே இந்த சம்பவத்தில் குற்றவாளியாக்கப்பட்டுள்ளதால் ஸ்டாலினும், உதயநிதியும் இப்போது வாய் திறந்து பேசுவார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சாத்தான்குளத்துக்கு நீதி வேணும் அறந்தாங்கி சிறுமிக்கு நீதி வேணும் என்று கத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை! இபாஸ் இல்லாமல் பறந்த உதயநிதி வாயில் இ போனது கூடத் தெரியாமல் இருக்கிறார் என்று கருத்துகள் டிவிட்டரில் வலம் வருகிறது

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img