கஸ்தூரிக்கும் திமுக., உ.பி.ஸ்க்கும் ஏழாம் பொருத்தம் தான்! கஸ்தூரி தனது டிவிட்டர் பதிவுகளில் கருத்துகளைப் பகிர, அதற்கு மிகக் கேவலமாக நடிகை என்ற நிலையில் கொச்சைப் படுத்தும் வசைச் சொற்களால் பின்னூட்டம் இடுவர்.  இதனால் அவ்வப்போது கஸ்தூரிக்கும் திமுக., டிவிட்டர் டீமுக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு வந்து டிவிட்டர் களமே களை கட்டிவிடும்.

இந்நிலையில், திமுக.,வின் ஒரு செயலுக்காக, இப்போது சமூக சேவகியான கஸ்தூரி கொஞ்சம் கூடவே உணர்ச்சி வசப்பட்டு… கர்ர்ர்ர்ர் தூ… என்று சவுண்டு விட்டிருக்கிறார்.

மோடிக்கு எதிராக விவசாயிகளை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், எங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரஸ் மற்றும் திமுகதான் – அய்யாகண்ணு கர்ர்ர்ர்ர்…தூ!

காவிரி பாசன விவசாயிகள் அமைப்புத் தலைவராக இருந்த அய்யாக்கண்ணு, திமுக.,வின் மேடைகளில் தோன்றி, திமுக., வின் குரலை விவசாயிகள் மாநாடு என்ற வகையில் விவசாயிகளின் குழுவுடன் எதிரொலித்துக் கொண்டிருந்த வரையில், அய்யாக்கண்ணு ஒரு தூய்மையான தன்னலமற்ற, மாபெரும் போராளி விவசாயியாக திமுக.,வினர் மேடைகளில் பேசிக் கொண்டிருந்தனர். மேலும், சமூக வலைத்தளங்களிலும் அய்யாக்கண்ணுவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு உடன்பிறப்புக்கள் எழுதிக் குவித்தனர்.

அதே நேரம், பாஜக., சார்புள்ளவர்களோ, ஆடிக்கார் அய்யாக்கண்ணு என்று கேலி செய்தனர். இவர் விவசாயி அல்ல என்றும், அவருக்கு எப்படி போராடுவதற்கு பணம் கிடைக்கிறது என்றும் விமர்சனம் செய்து வந்தார்கள்.

இந்நிலையில், பாஜக., தனது தேர்தல் அறிக்கையில், விவசாயக் கடன் தள்ளுபடி தவிர, ஏனைய நதி நிர் இணைப்பு, நதி நீர் இணைப்புக்கு தனி அமைச்சகம்,  விவசாயிகளுக்கான வட்டியில்லா கடன் உதவி, எளிய கடன் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து உறுதி கூறியதால், அய்யாக்கண்ணு தில்லியில் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். பின்னர் தனது போராட்டத்தைக் கைவிடுவதாகவும், தங்கள் கோரிக்கைகளை பாஜக., நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளதால் தாங்கள் மோடிக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என்றும், பாஜக.,வுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

இது தமிழக அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, திமுக.,வின் விமர்சனங்கள் கூர்மை ஆயின. இப்போது ஆடிக்கார் அய்யாக்கண்ணு கோஷத்தை திமுக.,வினர் எடுத்துக் கொண்டனர். பாஜக.,வினரிடம் வசைப்பாட்டு வாங்கியதை விட எவ்வளவு மோசமான தாக்குதல்களை தாம் எதிர்கொள்கிறோம் என்பது இப்போது அய்யாக்கண்ணுவுக்கு புரிந்தது

இந்நிலையில் மோடிக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிட்டு, பின்னணியில் இருந்ததே திமுக.,தான் என்று பளிச்சென்று கூறினார் அய்யாக்கண்ணு. தமிழகத்தில் காவிரி விவகாரம் உள்ளிட்ட அனைத்து நதி நீர் விவகாரங்களிலும் காவிரி நீர் மேலாண்மை வாரியப் பிரச்னையிலும் மத்திய அரசின் நியாயமான மற்றும் தமிழகத்துக்குச் சாதகமான  பல அம்சங்களை மறைத்து திமுக மேற்கொண்ட அரசியலுக்கு தாமும் உடன்பட்டதாக் அவர் கூறிய சில விசயங்கள் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், திமுக.,வின் இந்தச் செயலுக்காக கஸ்தூரி, கர்ர்ர்ர் தூ என்று காறித் துப்பியுள்ளார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...