December 6, 2025, 7:23 AM
23.8 C
Chennai

ஆலய வழிபாட்டுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் அரசு: ராம.கோபாலன் கண்டனம்!

ramagopalan
ramagopalan

ஆலய வழிபாட்டிற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் தமிழக அரசை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்று, இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

உடனடியாக கோவில்கள் திறக்க வலியுறுத்தி வருகின்ற ஜூன் 10ஆம் தேதி, பக்தர்களை ஒருங்கிணைத்து, கோவில் முன்பு ஒற்றைக் காலில் நின்று போராட்டம் நடைபெறும்..

கொரோனா தொற்று நோயால் உலகமே முடங்கியிருந்தது. பொருளாதாரம், வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி மக்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனைப் போக்கி, மக்களுக்கு நம்பிக்கை அளிக்க பாரதப் பிரதமர் அவர்கள், தொலைக்காட்சி வாயிலாக உரைநிகழ்த்தி ஊக்கப்படுத்தினார். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா நோயிலிருந்து தங்களைக் காத்துக்கொண்டு, குடும்பத்தினரையும் காத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அடுத்த கட்டமாக ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தி, மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில் தான், கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன.

தொடர் ஊரடங்கால் மக்கள் மனங்களில் உள்ள அழுத்தம் குறைய ஆலய வழிபாடு அவசியம் என கடந்த மே 26ஆம் தேதி கோயில் முன்பு சமூக இடைவெளியோடு தோப்புக்கரணம் போடும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தியது. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

அதன் காரணமாக தமிழக அரசு ஜூன் 3ஆம் தேதி அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து கருத்து கேட்டது. விரைவாக வழிபாட்டுத் தலங்களை திறக்க முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி கூறியது. ஆனால், கருத்து கேட்பு என்பது கண்துடைப்பு நாடகம் என்பது இப்போது வெட்ட வெளிச்ச மாகியுள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசு வழிபாட்டு தலங்களை ஜூன் 8ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதி அளித்தது. அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, பிரசாதம் ஆகியன இல்லாமல் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கலாம் எனக் கூறியது. அந்த நெறிமுறைகளின்படி இன்று புதுச்சேரி, கேரளா உட்பட பல மாநிலங்களில் கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து, மக்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.

உலக புகழ்பெற்ற திருப்பதியில் வருகின்ற 11ஆம் தேதி முதல் தினசரி சில ஆயிரம் பேர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் வழிகாட்டுத்தலின்படி ஆலயங்கள் திறக்க அனுமதிக்கவில்லை என்று கூறிவந்த தமிழக அரசு, மத்திய அரசு அனுமதி அளித்தும்  ஆலயங்களைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இந்து ஆலய வழிபாடு என்பது கூட்டு வழிபாடு கிடையாது. அதனால், தனி நபர் இடைவெளி கடைப்பிடிப்பது, பொது சுகாதாரம் பேணுவது எளிதானது. காலை, மாலை வேளைகளில், 3 முதல் 4 மணி நேரம், சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நிற்க வைத்து முக்கிய சன்னதிகளில் மட்டும் தரிசனத்திற்கு அனுப்ப வழி ஏற்படுத்த முடியும். 

ஆனால், அரசுக்கு கோவில்களைத் திறக்க மனமில்லை. தமிழக அரசின் செயல்பாடுகள் தோல்வி அடைந்து வரும் நிலையில், அதனை மூடி மறைக்கவே அரசு, ஆலய திறப்பை தள்ளி வைக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.

கோவில்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திற்கு வலிமையாக கொண்டு சேர்க்கும் வகையில் வருகின்ற ஜூன் 10 ம்தேதி புதன்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் முன்பும், பொது மக்களையும் ஒன்றிணைத்து இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று  பிரார்த்தனைப் போராட்டம் நடைபெறும். 

தமிழகம் ஆன்மீக பூமி. இந்த ஆன்மீக பூமியிலே ஆலயங்களை நிரந்தரமாக இழுத்து பூட்ட நினைக்கின்ற எடப்பாடியார் அரசு, தவறை உணர்ந்து மனம் திருந்தி கோவில்களை உடனடியாக திறக்க வேண்டுமென்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories