கீழப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

Published:

கீழப்பாவூரில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை மூலம் பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் மூலம் சமுதாய பாலிடெக்னிக் திட்டம் மற்றும் கீழப்பாவூர் பேருராட்சி, நெல்லை மாவட்ட பார்வை இழப்ப தடுப்பு சங்கம், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து பேருராட்சி சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது முகாமிற்கு கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பொன். அறிவழகன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணை தலைவர் தங்கச்சாமி,சமுதாய பாலிடெக்னிக் ஒருங்கிணைப்பாளர் அசோக் ஜெயகுமார், நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கராஜ் வரவேற்றார். முகாமில் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் விஸ்வராஜ், டாக்டர் திவ்வா கிஷன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். கண்புரை நோயாளிகளுக்கு அரவிந்த் கண்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாவூர்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் இசக்கியப்பா, பேரூராட்சி கவுன்சிலர்கள், சரஸ்வதி சுப்பிரமணியம்,வேல்சாமி, அருணாசலம், தங்கராஜ், அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பாலிடெக்னிக் பயிற்சியாளர்கள் முருகேசன், முருகன், ஹரிரங்கநாதன், கவிதா, மாரிச்செல்வி, மாரியம்மாள், திராவிட செல்வி, சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை சமுதாய வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், அசோக் ஜெயக்குமார், ஆலோசகர் முத்துகுட்டி, கணபதி ராமசுப்பிரமணியன் மற்றும் கீழப்பாவூர் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர். செய்தி ;செ.பிரமநாயகம் _கீழப்பாவூர் ffe13d2024e51025eac6834f87aa1bbf - 2026

Related articles

Recent articles

spot_img