
சாலையோர ஆதரவற்றவர்களுக்கு முடி வெட்டி, முகச் சவரம் செய்து, புத்தாடை அணிவித்து, கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்தனர் பாரதிய ஜனதா கட்சியினர்.
மதுரையில் கொரோனா அலையின் போது சாலையோர ஆதரவற்றவர்களை மீட்டு உணவு, உடை, குடிநீர், இருப்பிடம் அளித்து பாதுகாக்க வேண்டுமென வழக்கறிஞர். முத்துக்குமார் பொது நல வழக்கு தொடுத்திருந்தார்.
இதற்கிடையில் , மத்திய வீட்டு வசதி மற்றும் நகர் புற விவகார துறை அமைச்சகம், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இல்லாமல், சாலையோரத்தில் ஆதரவற்று இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. மேலும் , அந்தந்த சுகாதார துறை அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளை, உடனடியாக செய்ய வேண்டுமென அந்த கடிதத்தில் குறிப்பிட பட்டுள்ளது.

இதை அறிந்த, பி. ஜே. பி . ஊரக மற்றும் நகர் புற வளர்ச்சி பிரிவின் மாவட்டச் செயலாளர் வக்கீல். முத்துக்குமார் சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் பற்றிய விபரங்களை கடந்த ஒரு வாரமாக சேகரித்தார்.
அதன் படி , பி. ஜே. பி , மதுரை மாநகர் மாவட்ட த் தலைவர் கே.கே. சீனிவாசன் தலைமையில், நிர்வாகிகள் பழனிவேல், செல்வகுமார், ராஜு, ஜெயசிங், சதீஷ், நாகராஜ், கனகராஜ் ஆகியோர் சமூக இடைவெளியை கடை பிடித்து மதுரை காந்தி மியுசியம் எதிரில் சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்களுக்கு முடி வெட்டி, முக சவரம் செய்து, புத்தாடை, மாஸ்க் அணிவித்து காலை உணவு அளித்தனர்.
மேலும், அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிலிருந்து எவ்வாறு நம்மை காத்து கொள்வது என்று விளக்கி கூறினார்கள். கடைசியில் வழக்கறிஞர்கர்கள் ஜெயசிங், முத்துக்குமார், ராஜு, நாகராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியாளரிடம் இந்த ஆதரவற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வலிறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.