கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தற்போது மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் உலகத்தைப் பற்றிய இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேக்கர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தளத்துக்கு திடீரென விசிட் அடித்தார் ஸ்ருதியின் அம்மாவும், நடிகையுமான சரிகா. பின் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு விளம்பரப் படுத்தியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.
இது குறித்து படப் பிடிப்புத் தளத்தில் கிசுகிசுக்கப் பட்டது என்னவென்றால்… மகேஷ் மஞ்ச்ரேக்கர் போன்ற திறமையாளரின் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக் கொண்டதை கேள்விப்பட்ட சரிகா மகிழ்ச்சி அடைந்தாராம். இயக்குநர் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் ஸ்ருதியின் திறமை மேலும் பளிச்சிடும் என்றாராம்.
இப்படி படப்பிடிப்புத் தளத்திற்கு திடீரென வந்த தன் அம்மாவை பணியாற்றிய அனைவருக்கும் தனித்தனியாக அறிமுகப்படுத்திய ஸ்ருதி ஹாசன், பின் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்தும் இயக்குநர் தன்னிடம் எப்படி வேலை வாங்குகிறார் என்பதையும் சரிகாவிடம் சொல்லி மகிழ்ந்தாராம்.
படப்பிடிப்புத் தளங்களுக்கு நடிகையின் அம்மா வருவது ஒன்றும் புதிதில்லை என்றாலும், இதை ஒரு செய்தியாக மாற்றும் அளவுக்கு ஸ்ருதி இதில் ஆர்வம் காட்ட ஒரு காரணமும் இருக்கிறதாம்.
அண்மைக் காலமாக ஸ்ருதி ஹாசன் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றதும், அவர் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார், விரைவில் திருமணம் செய்துகொண்டு நடிப்பை விட்டுவிடுவார் என்று வதந்திகள் பரவியதாம். இதை வெறும் வதந்தி தான் என்று நிரூபிக்கவே இந்த விசிட் பெரிதாக்கப் பட்டதாம்.
#ShrutiHaasanBollywoodShoot Tweets