இரும்புத்திரை டிரைலர் ரிலீஸ்

சினி நியூஸ் சினிமா

irumbuthirai4 - 2026அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, ஆக்சன்கிங் அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்சன், மிலிட்டரி, சைபர் வார், காமெடி என அனைத்து அம்சங்களுடன் ஜனரஞ்சக படமாக இந்த படம் உருவாகியுள்ளது என்பது இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரியவருகிறது. இந்த டிரைலரின் ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஆக்சன் அர்ஜூன் வித்தியாசமான கெட்டப்பில் வில்லன் வேடத்தில் அசத்தியுள்ளதாகவும் விஷால் மற்றும் அர்ஜூன் மோதும் காட்சிகள் படத்தின் ஹைலைட் என்றும் கூறப்படுகிறது.

ஜார்ஜ். சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில், யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் மே 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.