விஷாலுக்கு வில்லனான ஆர்யா – புதிய பட அப்டேட்

Published:

தமிழ் சினிமாவில் நடிகர்களாக உள்ள விஷாலும், ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இருவரும் இணைந்து பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்திலும் நடித்திருந்தனர்.

இந்நிலையில், எனிமி எனும் ஒரு புதிய படத்தில் அவர்கள் மீண்டும் இணையவுள்ளனர். ஆனால், இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் துவங்கியது.

இப்படத்திற்கு ‘எனிமி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மிருனாளினி கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img