எந்த ஹீரோவும் வேணாம்!.. முருகதாஸ் நிலைமை இப்படி ஆகிப்போச்சே!…

Published:

மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து யாரை இயக்கப்போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு அனிமேஷன் படத்தை இயக்கவுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டின் பிரபலமான டிஸ்னி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ஹாலிவுட்டில் எடுக்கப்படும் அனிமேஷன் படம் போல் இப்படத்தை முருகதாஸ் உருவாக்கவுள்ளாராம்..

முன்னணி ஹீரோக்களை இயக்கி வந்த முருகதாஸ் அனிமேஷன் படத்தை இயக்கப்போவது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img