நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று வீரவாஞ்சி பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு, வீர வாஞ்சிநாதன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தென்காசி கோட்ட ஆட்சியர் சௌந்தர்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




