சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வருமான வரித்துறையின் அதிரடி சோதனை தொடர்ந்து, சென்னை மாநகரில், கார்களில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
போயஸ்கார்டன் பகுதியில், தீபக் என்பவர் வீட்டில் 28 கோடி ரூபாயும், பெசன்ட் நகரில் ஒரு இடத்தில் 24 கோடி ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனையில், மொத்தம் 120 கோடி ரூபாய் வரை பணமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முட்டை கொள்முதல் தொடர்பான நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, தற்போதைய இந்த சோதனை, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அடுத்து, சென்னையில் அரசு ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக வருமானவரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை உட்பட 30 இடங்களில் வருமானவரி சோதனையில் ரூ.160 கோடி, 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது. அருப்புக்கோட்டையில் நடைபெறும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.




