
இந்துக்களுக்கு அநீதி இழைக்கும் காவல் துறையைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி பேட்டையில் வைத்து நடைபெற்றது.
பெரும்பான்மை இந்துக்கள் வாழக்கூடிய பேட்டை பகுதியில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பல புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பேட்டை காவல் நிலையத்தை கண்டித்து அவர்களை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டி இந்த கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், பாளையங்கோட்டையில் டிசம்பர் 27 அன்று நடைபெற இருக்கும் தேசவிரோத நக்சல் கும்பல்களின் மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்றும்,இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அகில பாரத வித்யா பரிஷத் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.