
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் சரவணய்யர் பள்ளியில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் மாவட்ட செயற்குழு நடைபெற்றது.
இந்த செயற்குழுக் கூட்டத்துக்கு, இந்துஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எம். பாண்டியன் தலைமை தாங்கினார். காந்தி மார்க்கெட் ஸ்டான்டு தலைவர் சைமன் பீட்டர், பேருந்து நிலையம் கார் ஸ்டாண்டு தலைவர் டி.சீதாராமன் ஆகியோர் முன்னிலையில், இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை, இந்த அமைப்பின் நெல்லை கோட்ட செயலாளர் பெ.சத்திவேலன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில், சிறப்புரை ஆற்றினார், இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார்

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சங்கர் உள்பட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தென்னக ரயில்வேயில் பயணிகளை ஏற்றி இறக்குவதில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
தென்னக ரயில்வே துறையில் ரயில் நிலையங்களில் ஆட்டோவில் பயனிகளை ஏற்றவும் இறக்கவும் கட்டனம் வசூலிப்பதனை இச்செயற்குழு வரவேற்கிறது. ஆனால் 6 மாதத்திற்கு ரூ.3074 கட்டணம் வசூலிப்பதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆட்டோ ஒட்டுனர்கள் அடிவயிற்றில் அடிப்பதாக இது தெரிகிறது. கொரோனா பரவல் காலத்துக்கு முந்தைய தொகையான ரூ.1027ஐ வசூலிக்க வேண்டும் என்று தென்னக ரயில்வேத் துறைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் கேட்டுக் கொள்கிறது .. என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.