
துபையிலிருந்து வந்த ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 18 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் துபையில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் மதுரை வந்த பயணிகளிடம் மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு உரியவகையில் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் சோதனை செய்ததில் மர அறுவை எந்திரத்தின் உள் பாகமாக மறைத்து வைக்கப்பட்ட 350 கிராம் எடையுள்ள ரூபாய் 18 லட்சம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரிடம் மதுரை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.