இந்திய தபால் சேவைகளை ஆதரிப்போம்!

உரத்த சிந்தனை பொது தகவல்கள் வணிகம்

India Post Office - 2026

ஜி.எஸ்.டி கூரியர். ஆதரிப்போம் தபால் துறை சேவைகளை!

Gstக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் கவர் அனுப்ப ரூ.25 தான் புரபசனல் கூரியரில் கட்டணம். தற்பொழுது ரூ.50 வாங்குகிறார்கள். கேட்டால் ஜி.எஸ்.டி என்கிறார்கள்.

25 ரூபாய்க்கு 18% ஜி.எஸ்.டி சேர்த்தாலும் ரூ.4.50 தான் சேர்த்து வாங்க வேண்டும். அதாவது ரூ.29.50 தான். அதே போல் துணி சேம்பிள் பார்சலுக்கு கிலோக்கு ரூ.80 என்று ஏற்றி விட்டார்கள். இது போல் ஜி.எஸ்.டி மீது பழி போட்டு பல பெரிய நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன.

இந்திய அரசின் தபால் சேவை நாடு முழுவதும் தற்பொழுது நல்ல வேகத்தில் டெலிவரி தருகிறார்கள். கட்டணம் ரூ.5 முதல் தான் வாங்குகிறார்கள். அதுவே Speed post என்றால் ரூ.25 தான் கட்டணம். அடுத்த வேளை நாளில் டெலிவரி செய்துவிடுகிறார்கள்.

இந்திய அஞ்சலில் பார்சல் கட்டணம் மிக மிகக் குறைவாக கிலோவுக்கு ரூ.41 தான் வாங்குகிறார்கள். எடை ஏற ஏற கட்டணம் குறைவாக வாங்கி கொள்கிறார்கள்.

ஆன் லைன் மூலம் தபால் எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்றும் பார்க்க முடியும்.

இந்த மாதம் முதல் இந்திய அஞ்சல் துறையின் சேவைகளை பயன்படுத்துகிறேன் தபால்கள் மற்றும் பார்சல்கள் மிக குறைந்த கட்டணத்தில் கூரியர் சர்வீஸ் இல்லாத குக்கிராமத்துக்கு கூட சரியாக சென்று சேருகிறது.

எனவே தபால் சேவையை அனைவரும் பயன்படுத்தி பாருங்கள். இரயில் நிலைய தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 9 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.