ஆன்மீக அரசியலிடம் சில கேள்விகள்…

உரத்த சிந்தனை

கடந்த ஆண்டு பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு ஆரவு தரவில்லை, அனைத்து தரப்பினர்களையும் அழைத்து பேச முன்வரவில்லை, தன்னுடைய காலா படத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்று போராட்டத்தை வாப்பஸ் வாங்க வலியுத்தினார் ரஜினி சார்…

கடந்த முறை ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்தபோது போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சைகள் தீவிரமான நிலையில் இருந்த நேரம்.

தான் ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இந்த நிலைக்கு வந்ததாக சொல்லும் ரஜினி சார் எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஆனால் அப்போது அவர் அரசியலுக்கு வந்ததாக நாம் நினைக்கவில்லை. அவர் ரசிகர்களுடன் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு இருந்தார்.

ஆனால் இந்தமுறை நடந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைகளின் போது அவர் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தற்போது பஸ் கட்டணம் மிக உச்சத்திற்கு இந்த அரசால் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவரை எந்த கண்டண அறிக்கையும் இல்லை.

இது தவிர மக்கள் பிரச்சினைகள் நிறைய உள்ளது.

அவைகளில் இவரை நாம் எதிர்பாக்கப் போவதில்லை. அவர் சார்ந்த போக்குவரத்து மற்றும் திரைப்பட துறைகளுக்கு மட்டுமே இவரது குரலை எதிர்பார்த்தோம்.

ரஜினி போன்ற பிரபலங்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு ஆதரவு கொடுத்து இருந்தால் அவர்களுடைய ஞயாயமான கோரிக்கைகள் வெற்றி பெற்று இருக்கும்.

தனக்காக உயிரையே கொடுக்கும் ஏழை ரசிகர்கள் பிளாக்கில் டிக்கட் வாங்கிப் படம் பார்பதை வியாபார ரீதியாக தலையிட முடியாது என்று வாதம் செய்யும் ரஜினி அவர்களின் ஆதரவாளர்களே, நீங்கள் இதற்கு பதில் சொல்லுங்கள்..

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அவர் ரோட்டிற்கு வந்து ஆர்பாட்டங்கள் செய்ய வேண்டாம், கைதாக வேண்டாம், போராட்டக்காரர்களோடு சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டாம், குறைந்தபட்சம் ஒரு கண்டண அறிக்கையாவது தந்து இருக்கலாமே ?

தன் ரசிகர்களை தொண்டர்களை ஆன்மீக அரசியலில் ஈடுபட நினைக்கும் ரஜினி அவர்கள் அவர்களை போருக்கு தயாராக இருக்க சொல்வதுதான் ஆன்மீக அரசியலா ?

அப்படியானால் அரசியல் தர்மம் என்றால் என்ன ?

எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழக மக்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

நம்பிக்கையான தலைவர்கள் இல்லை, நல்ல தலைவர்களுக்கு மரியாதை இல்லை. ஏற்கனவே பல தலைவர்களையும் திரையுலகப் பிரபலங்களையும் நம்பி ஏமார்ந்து நடுத் தெருவில் நிர்க்கும் நிலையில் ரஜினி வருவாரா, கமல் வருவாரா, விஜய் வருவாரா, என்று ஏங்கி எதிர்பார்க்கும் சூழலில் குறைந்தபட்ச ஒரு எதிர்ப்பையோ, அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு குரலோ, என எதுவுமே செய்ய திரானி இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் ஒதுங்கிப் போய் விடுங்கள்.

மத்திய மாநில அரசுகளுடன் தற்போது இருப்பதைப் போலவே நல்ல உறவுடன் இருந்து உங்கள் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

வருமான வரி ரைடு வராது. வரும் வருமானங்களும் நிற்க்காது. மிக உயரிய விருதுகளும் சுலபமாக கிடைக்கும்.

அரசியலில் இருப்பதாக காட்டிக் கொண்டு, படத்திற்காக மட்டுமே ஊடகங்களை நடத்தும் ஊடகங்களுக்கு விவாத தலைப்புகளாகவும், இருப்பது உண்மையான பிரச்சினைகளுக்கு ஏற்படுத்தக் கூடிய முட்டுக்கட்டைகள்தான் என்பதை உங்களைப் போன்ற குறிப்பாக விஷாலைப் போன்றவர்கள் உணர வேண்டும்.

லோகோவில் தாமரை, பாம்பு மற்றும் இரண்டு விரல்கள் இருந்த்து. முதலில் தாமரை போனது, தற்போது பாம்பும் வெளியேறியது.

இரண்டு விரல் மட்டுமே உள்ளது. ஏற்கனவே இரண்டு விரலால நாங்க ரொம்ப அவஸ்தப்பட்டுகிட்டு இருக்கிறோம். அதுக்கு முன்னாடியில இருந்தே ஐந்து விரல்களால் பல பிரச்சினைகளை சந்திச்ச்சுட்டோம்.

இந்த ரெண்டு விரல் ஏற்கனவே இருக்கிற ஐந்து விரலோடோ, இல்ல இரண்டு விரலோடோ சேர்ந்து கொண்டு போனாலும் போகட்டும்.

தனியா நின்னாலும் நின்னு வெற்றி பெறட்டும். ரஜினி யாருக்கு ஆதரவு தந்தாலும் ( பா.ஜ.க தவிர ) அவர்கள் வெற்றி பெருவார்கள் என்பது உறுதி.

தனியாக போட்டுயிட்டாலும் கூட அவர் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஊமை ஜனங்களும் செவிட்டு அதிகாரவர்கத்தினரும் இருக்கும் சூழலில் இவையெல்லாம் சாத்தியம்தான்.

தன் துறை சார்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த சூழலில் கூட குரல் கொடுக்க முடியாத ரஜினி சார் போன்றவர்கள் வெற்றி பெற்றால் அது சாமியார்களுக்கு நல்லாத இருக்கலாம் சாமானியர்களுக்கு நல்லதாக இருக்குமா என்பதே என் கேள்வி.

மிகுந்த வேதனைகளுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.