aswin - 2026

மணிரத்னம் இயக்கவிருக்கும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் இப்படத்தில் சுந்தர சோழனாக அமிதாப் பச்சன், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், மற்றும் குந்தவை நாச்சியார் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஜெயராம், பார்த்திபன், ஜஸ்வர்யா ராய், அமலா பால், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் நந்தினியின் தாயாரான மந்தாகினி தேவி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

மங்காத்தா படம் மூலம் நமக்கு அறிமுகமானவர் அஸ்வின் ககுமனு. இவர் அதற்கு பிறகு 7ஆம் அறிவு படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அஸ்வின் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த, இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய, அதற்கு பிறகு மேகா உள்பட பல படங்களில் நடித்தார். அஸ்வின் சுனைனாவுடன் இணைந்து நிலா நிலா ஓடி வா எனும் இணையத் தொடரிலும் நடித்திருந்தார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

தற்போது அஸ்வின் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஸ்வின்.

அதில், அஸ்வின் தான் கல்லூரி மாணவனாக இருக்கும் போதே மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படத்துக்காக பின்னணி இசையில் வேலை செய்ததையும் நினைவு கூறியுள்ளார்.

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் காட்சி வடிவில் மாற்ற களமிறங்கியுள்ளார். மிகுந்த பொருட் செலவில் உருவாகவுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான வேலையில் அவர் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தற்சமயம் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending