
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட ஆடை குறித்தும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் குறித்தும் பாடகி சுசித்ரா கடுமையாக விமர்சித்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேடியோ ஜாக்கி, பாடகி என சினிமாவில் புகழ்பெற்ற சுசித்ரா, சில வருடங்களுக்கு முன் சுசிலீக்ஸ் என்ற பெயரில் திரையுலக பிரபலங்கள் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அவர் கடந்தாண்டு தொடங்கிய தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார்.

ஆனால் எதிர்பார்த்த அளவு அவரிடம் இருந்து நிகழ்ச்சிக்கான எந்த விளைவும் ஏற்படாததால் 2 வாரங்களில் அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுசித்ரா உள்ளிட்ட பிக்பாஸ்-4ல் பங்கேற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் நெசவாளர்களின் நலன் கருதி, கமல்’House Of Khaddar’ என்ற புதிய பிராண்டை அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கு அந்த பிராண்டில் தயாரான ஆடைகளை வழங்கி அணிந்துகொள்ள சொன்னார்.
ஆனால் நிகழ்ச்சியில் தனக்கு வழங்கப்பட்டது கதர் ஆடை இல்லை என்றும், சிந்தெடிக் உடை என்றும் சுசித்ரா பெயரில் வெளியான இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு அருவருப்பான மனிதர் என்றும், கைப்பாவை மாஸ்டர் என்றால் அது கமல் தான் எனவும் அந்த பதிவில் தெரிவித்ததாகவும், சிறிது நேரத்தில் அந்த பதிவு நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் ஸ்கிரீன்ஷாட் தற்போது இணையத்தில் பரவி வருவதால், சுசித்ரா எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியர் என்பவர் தெரியாத விஷயங்களை மாணவர்களுக்கு கற்று தருபவர். இதற்காக ஆசிரியர்கள் சிறப்பு கல்வியும் பயிற்சியும் பெற்றவர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் பற்றி பொதுவாக குழந்தைகள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கனவு வருவது உண்டு. இப்படி கனவு வருவதினால் கிடைக்கும் பலன்களை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நீங்கள் மாணவர்களுக்கு அல்லது யாருக்காவது கற்பிக்கும் ஒரு ஆசிரியர் என்று கனவு கண்டால், அந்த கனவு பெரும்பாலும் உங்களுக்குத் தெரிந்த ஒன்றை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்புவதை குறிக்கும் அல்லது உங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு இருக்கும் விருப்பத்தை இது பிரதிபலிக்கிறது.