prahudeva - 2026கடந்த 1993ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் பார்த்திபன் இயக்கி நடித்த ‘உள்ளே வெளியே’ 25 ஆண்டுகள் பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் பார்த்திபனே ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இன்னொரு முக்கிய கேரக்டரில் பிரபுதேவா நடிக்கவுள்ளதாக கூறப்பாடுகிறது

ஏற்கனவே பிரபுதேவா, பார்த்திபன் ஆகிய இருவரும் ஜேம்ஸ் பாண்டு’, `சுயம்வரம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இதற்கு பின்னர் பார்த்திபன், பிரபுதேவா இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணையும் படம் இந்த படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் ஆடுகளம் கிஷோர், ரோபோசங்கர், மம்தா மோகந்தாஸ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர்களும் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் தொடங்கும் என்றும் இந்தவருட இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending