விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் அஞ்சலி

Published:

vijay sethupathi and anjali - 2026பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி ஜோடியாக நடிக்கவுள்ளனர். இவர்கள் ஏற்கனவே ‘இறைவி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைப்பதோடு தயாரிக்கவும் செய்கிறார். இவருடன் இணைந்து ராஜராஜன் என்பவரும் இந்த படத்தை தயாரிக்கின்றார்.

இந்த படத்தில் வில்லனாக லிங்காவும், இன்னொரு முக்கிய கேரக்டரில் விவேக் பிரசன்னாவும் நடிக்கவுள்ளனர். விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் இசையில் உருவாகும் இந்த படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தென்காசியில் தொடங்கவுள்ளதாகவும், அதனையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்

விஜய்சேதுபதி, அஞ்சலி, அருண்குமார், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி

Related articles

Recent articles

spot_img