saipallavi3 - 2026பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்த ‘தியா’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பிரஸ் காட்சி நேற்று நடைபெற்றபோது, இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என பத்திரிகையாளர்கள் படம் பார்த்த பின்னர் கருத்து கூறினர்.

இந்த நிலையில் சாய்பலல்வி அடுத்ததாக தனுஷ் மற்றும் சூர்யா படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சாய்பல்லவி தற்போது தனுஷூடன் மாரி 2 மற்றும் சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பில் சாய்பல்லவி மறி மாறி கலந்து கொள்ளவுள்ளாராம்.

தற்போது தனுஷின் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடந்து வருவதாகவும் இதில் தனுஷ் சாய்பல்லவி நடித்து வரும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending